2025 மே 05, திங்கட்கிழமை

கந்தசஷஷ்டி விரதம் ஆரம்பம்: பக்தர்களுக்கு அறிவுறுத்தல்

Gavitha   / 2020 நவம்பர் 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

கந்தசஷ்டி விரதத்தையெட்டி, கோவில்களுக்கு வரும் பக்தர்கள், சுகாதார முறைமையைக் கையாண்டு வழிபாட்டில் ஈடுபடுவதுடன், ஆலய குருக்கள், நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார். 

கந்தசஷ்டி விரதத்துக்கான காப்பு கட்டும் நிகழ்வு, ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரணியர் கோவிலில், இன்று (18) நடைபெற்றது. எதிர்வரும் 21ஆம் திகதி வரை நடைபெறவுள் இந்த விரதப் பூஜைகளுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகமாகக் காணப்படும் என்பதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்து.

அந்த வகையில், கோவிலுக்குள் 5 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என்றும் 3 – 5 நிமிடங்கள் மாத்திரமே பூஜையில் கலந்துகொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள், தமது விவரங்களை கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொப்பியில் பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டுள்ள செனிடைஸரைப் பயன்படுத்திய பின்னர், முக்கவசம் அணிந்துகொண்டு, கோவிலுக்குள் நுழையவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள், கோவில் நிர்வாகத்தினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வழிபாட்டில் ஈடுபட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X