R.Maheshwary / 2022 மே 02 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கந்தப்பளை தேயிலை மலை தோட்டத்தில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமையால், டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்த தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் தோட்ட மக்கள் தெரிவிக்கையில், கடந்த பத்து வருடத்திற்கு மேலா குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமையினாலும் தோட்ட நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருப்பதனாலும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தோட்ட நிர்வாகங்கள் குப்பைகளை அப்புறப்படுத்த சிலரை நியமித்து முறையாக பராமரித்து வந்தார்கள். ஆனால் தற்போது முறையாக பராமரிக்க தோட்ட நிர்வாகம் முன்வராததால் குப்பை குழிகள் நிரம்பி வழிகின்றன.
இதற்கு அருகாமையில் வீடுகள் காணப்படுகின்றமையினால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், துர்நாற்றமும் .வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே தோட்ட நிர்வாகம் நோய்கள் பரவ முன் விரைந்து, இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கந்தபளை தேயிலை மலை தோட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago