Kogilavani / 2017 ஜூலை 07 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.ஆ.கோகிலவாணி
“பெருந்தோட்டக் கம்பனிகள், எமக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றன. காடுகளாகக் கிடந்த பெருந்தோட்டங்கள் பல இன்று துப்புரவு செய்யப்பட்டு வருவதுடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு அதற்கூடாக வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகின்றது” என்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், பெருந்தோட்டக் கம்பனிகள் பலவற்றுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், கடந்த மாதம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஒன்பது கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இ.தொ.கா, ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஏனையக் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,
“நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தனிப்பட்ட தேவையொன்றுக்காக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். அவர் எதிர்வரும் 12 ஆம் திகதியே நாடு திரும்புவார். அவர் நாடு திரும்பியவுடன், மீதமுள்ள கம்பனிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். ஏற்கனவே, பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கம்பனிகள் எமக்களித்த வாக்குறுதிகளை, நிறைவேற்றி வருகின்றன. தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காடுகளாகக் கிடந்த பெருந்தோட்டங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன” என்றார்.
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago