2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கயிறுகட்டி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஷ்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை பிரதேச செயலக அதிகாரத்துக்கு உட்பட்ட  கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டி (டுடைல'ள டுயநெ நுளவயவந) தோட்ட மக்கள், இன்று வெள்ளிக்கிழமை (30) காலை 10 மணி முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த தோட்டத்தில் 7 உயிர்களைக் காவுகொண்ட மண்சரிவு நிகழ்ந்து ஒரு மாதமும் 10 நாட்களும் நிறைவடைந்துள்ளதுடன், மீரியாபெத்தவில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. 

இவற்றையொட்டி அனுதாபம் தெரிவிக்கும் முகமாகவும் மழைக் காலங்களில் தொடர்ந்தும் அச்சத்துடன் வாழும் தமக்கு, அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் வீடுகள் அமைத்துத் தருமாறும் கோரியே இக்கவனயீர்ப்பு போரட்டத்தை மக்கள் முன்னெடுத்துள்ளனர். 

குறித்த வீட்டுத்திட்டத்தில் இத்தோட்டத்தில் வசிக்கும் 120 குடுப்பங்களில் 19 குடுப்பங்களுக்கு மாத்திமே வீடமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி ஜப்பான் நாட்டின் ஜே.ஈ.சி. என்ற ஆய்வு நிறுவனம் இத்தோட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கொத்மலை, ரம்பொடை வெதமுல்ல கயிறுகட்டிதோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிறுவர்கள், பெண்கள் உட்பட எழுவர் பலியாகியிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .