2025 மே 16, வெள்ளிக்கிழமை

கருமாரி அம்மன் கழுத்திலும் கை வைப்பு

R.Maheshwary   / 2023 ஜனவரி 04 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

நானுஓயா - டெஸ்போட் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரி அம்மன் ஆலயத்தை உடைத்து அம்மனின் தங்க நகைகள் மற்றும் உண்டியலிலுள்ள பணம் என்பன  கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால்

நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், விசாரணைகளை மேற்கொள்ளும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயத்தின் பின் கதவு உடைக்கப்பட்டு, 30, 000 ஆயிரம் ரூபாய்  பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியையும், ஆலய முன்றலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் கூட இவ் ஆலயத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்று தங்க நகைகள், உண்டியல் திருட்டு போயிருந்தமை தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில்,  இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .