2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கரும்புக்கான கொடுப்பனவை அதிகரிக்க கோரி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 மே 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

ஒரு தொன் கரும்புக்கு, பெல்வத்த சீனித் தொழிற்சாலையால் வழங்கப்படும் 6,500 ரூபாயை 10,000 ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி, கரும்பு உற்பத்தியாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


மொனராகலை- பெல்வத்த சீனித் தொழிற்சாலை வளாகத்தில் நேற்று முன்தினம் (3) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், சுமார் 500க்கும் மேற்பட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பெல்வத்த “கரும்பு உற்பத்தியாளர்கள் ஒன்றியம்” இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கரும்பு உற்பத்திக்கான செலவு குறுகிய காலத்துக்குள் 3 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்த “கரும்பு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்,எமது கோரிக்கைகள் நியாயமானவை என்றார்.

அத்துடன் இலங்கை சீனி நிறுவனத்தின் பெல்வத்த பிரிவு அதிகம் இலாபத்தை பெறும் நிறுவனம் என்றும் எனவே எமக்கு ஒரு தொன் கரும்புக்கான கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த குறித்த தொழிற்சாலையின் பிரதான நடவடிக்கை அதிகாரி மேஜர் குமாரதுங்க, கரும்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கை தொடர்பில், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாட சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X