R.Maheshwary / 2022 மார்ச் 09 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
கர்ப்பிணியொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறித்த இருவர் இன்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கர்ப்பிணி கட்டுதெனியவில் உள்ள கிளினிக்குச் சென்று திரும்பும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து அப்பெண் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், பொலிஸார் முன்னெடுத்த விசாணைகளுக்கமையே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றிய பொலிஸார், அவர்களிடமிருந்து 3,000 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் மாத்தளை- வரகந்த மற்றும் ஹரஸ்கம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபர்களை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026