2026 ஜனவரி 21, புதன்கிழமை

கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம்

Nirosh   / 2021 மே 23 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுரேஸ்குமார்)

பதுளை ஹப்புத்தளை கல்கந்த கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட சில மலைப்பாங்கான இடங்களில் கற்பாறைகள் சரிந்து விழுந்துள்ளன.

அத்துடன் அப்பகுதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக, ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களால் வழங்கப்பட்டத் தகவலையடுத், நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஹப்புத்தளை பிரதேசசபையின் தவிசாளர் கந்தசாமி கண்ணா, ஹப்புத்தளை பிரதேச செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், அப்பகுதிக்கு நேற்று(23) விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது சில கற்பாறைகள் சரிந்து விழுந்துக்கிடந்தன என்றும் இதனால் எவருக்கும் எந்தவிதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் 60 பேர் வரை வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஹப்புத்தளை – கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானதத்துடன் செயற்படுமாறு ஹப்புத்தளை பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அனர்த்தங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X