2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கற்பாறைகள் சரிவால் 20 குடும்பங்கள் பாதிப்பு

R.Maheshwary   / 2022 ஜூன் 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தில்  மோர்கன்  பிரிவில் மக்கள் வாழும்   குடியிருப்புக்கு பின்புறத்தில் உள்ள மலையிலிருந்து பாரிய கற்பாறைகள் இன்று காலை 8 மணியளவில் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாழும் 20 குடும்பங்களைச் சார்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

இத்தோட்டம் அமைந்திருக்கும்  பகுதியில் பாரிய அளவிலான கற்பாறைகள் காணப்படுகிறது.

இதனால்  மழைக்காலங்களில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து  விழகூடிய ஆபத்தான  நிலைமையை  காணக்கூடியதாக இருக்கின்றன.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததால், அங்கு  வாழ்ந்த 50க்கு மேற்பட்டவர்கள் தோட்டத்திலுள்ள பொது மண்டபமொன்றில்  தங்க வைக்கப்பட்டனர் .

அதன்பின் இம் மக்களின் பாதுகாப்பு கருதி இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 46 தனி வீடுகள் கட்டப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்டனர் .

இன்னும் எஞ்சிய  குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிப்பான குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து  வாழ்ந்து வருகின்றனர் .

அத்தோடு இரவு நேரங்களில் சிறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மழை காலங்களில் உயிர் அச்சத்துடன் வாழ்வதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர் .

இன்றைய தினம் சரிந்து விழுந்த கற்களும் ஆங்காங்கே ஆபத்தான நிலையில் தேங்கி நிற்பதை காணமுடிகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு நாளும் இரவு பொழுதை மிகவும் அச்சத்துடன் கழிப்பதாகவும் அதிகாரிகள் எவரும் எங்களுடைய பிரச்சினைகளை கவனிப்பதில்லை எனவும் கற்பாறைகள் தொடர்ந்து சரிந்து விழுவதால் உயிர் ஆபத்துகள் ஏற்பட கூடும்  உரிய அதிகாரிகள் தமக்கு உடனடியாக பாதுகாப்பை வழங்குவதோடு புதிய வீடுகளை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X