Freelancer / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
நுவரெலியா பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் நுவரெலியா கிளையினரின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் நந்தன கலபடவின் வழிகாட்டலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அவுஸ்திரேலியா செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடர்பாடல் அதிகாரி திருமதி கேட் மார்ஷல் மற்றும் நுவரெலியா பிராந்திய செயலாளர் பிரகீத் தனசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மாணவர்கள் 50 பேருக்கு புதிய பாடசாலை தவணைக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்ன.

2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago