Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 14 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.யோகா
கலஹா- ஹயிட் தோட்டத்தில் காணாமல் போன 14 வயது சிறுமி, 6 நாள்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இராசலிங்கம் பிரியதர்சினி என்ற 14 வயது சிறுமியே இவ்வாறு யாழ்ப்பாண பஸ் தரிப்பிடத்திலிருந்து 11ஆம் திகதி காலைகண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அச்சிறுமி காணாமல் போனமை தொடர்பில், ஊடகங்களில் வெளியான செய்தியை அவதானித்த வர்த்தகர் ஒருவர், சிறுமி பஸ் தரிப்பிடத்தில் இருப்பதை கண்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார்.
சிறுமி கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, அவர் கண்டி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் நாளை, நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என்றும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள தனது நண்பியைத் தேடிச் சென்றதாகவும், செல்லும் வழியில் தனது அலைபேசி செயலிழந்ததால் நண்பியுடன் தொடர்புகொள்ள முடியாமல், பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago