2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கலாபொக்க தோட்டப் பிரச்சினைக்கு செந்திலின் தலையீட்டால் தீர்வு

R.Maheshwary   / 2022 ஜூன் 07 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பன்வில-கலாபொக்க தோட்டத்தில் உள்ள  சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்த சம்பவத்துக்கு,  இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

தோட்ட மக்களால் இந்தப் பிரச்சினை தொடர்பில், செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 24 மணிநேரத்திற்குள் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கலாபொக்க தோட்டத்தில் வெளிமாவட்டங்களில் பணிபுரிபவர்களின் பிள்ளைகள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திலே அனமதிக்கப்பட்டு வந்தனர் . தோட்ட நிர்வாகம் வெளிமாவட்டங்களில் பணிப்புரிபவர்களின் பிள்ளைகளை சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்க திடீரென மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையிலேயே இந்தப் பிரச்சினைக்கு செந்தில் தொண்டமான் தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X