2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்பாலம் விபத்தில் இளைஞன் படுகாயம்

Freelancer   / 2023 ஏப்ரல் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா -உடபுஸ்ஸலாவை பிரதான வீதியில் கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன்  மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேராக மோதுண்டு விபத்து சம்பவித்துள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

படு காயங்களுக்கு உள்ளான இளைஞன், மது அருந்திய நிலையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                                                                                                                                            ஆ.ரமேஸ்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X