R.Maheshwary / 2022 மே 05 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
நாடு முழுவதும் நாளை (6) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் நடவடிக்கைக்கு கல்விசாரா ஊழியர்கள் சங்கமும் ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அன்றைய தினம் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பும் முன்னர், அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பெற்றோர்களிடம் அச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிக நீண்ட காலமாக அதிகாரிகள் முன்வைக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உரிய தீர்வை வழங்காமை காரணமாகவே குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தர தீர்மானித்ததாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித்.கே. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடுபூராகவும் அமைந்துள்ள 10,150 பாடசாலைகள், கல்வியற் கல்லூரிகள், கல்வி திணைக்களங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சேவையாற்றும் 30,000 மேற்பட்ட கல்விசாரா பணியாளர்கள் இந்த ஹர்த்தாலில் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.
இதன் காரணமாக அன்றைய தினம் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் சிந்தித்து, பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago