R.Maheshwary / 2022 மார்ச் 22 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
" கல்விப்புரட்சிமூலம் நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். எனவே, இம்மாவட்டத்தில் வாழும் மாணவர்கள் கல்வித்துறையில் வெற்றிநடைபோட தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் அள்ளி வழங்குவேன்." - என ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதம அமைப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.
கொட்டகலை -மேபீல்ட் தோட்டம், சாமஸ் பிரிவு, வட்டவளை -மவுன்ஜீன் தோட்டம், கடவளை தோட்டம் ஆகிய பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே, திருமுகன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
" விஷ்ணு ஆரோவணம் எனும் அரச சார்பற்ற நிறுவனம் தன்னால் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் சமூகசேவையும் ஆரம்பமானது. குறிப்பாக பல்கலைக்கழகம் தெரிவாகி, வறுமையால் கல்வியை தொடர முடியாமல் இருந்த சுமார் 120 மாணவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் புலமைப்பரிசல் வழங்க நடவடிக்கை எடுத்தேன். இனியும் அந்த சேவை தொடரும். கல்வி கண் திறப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கிவருகின்றேன்.
தனது சேவையை பாராட்டி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட பிரதம அமைப்பாளர் பதவியை கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கியுள்ளார். இந்த பொறுப்பையும் தான் மக்களுக்காகவே பயன்படுத்துவேன் என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் வாழும் சிறார்களுக்கான சத்துணவு திட்டத்தையும் ஆரம்பித்துள்ளேன். சிறார்களின் மூளை வளர்ச்சிக்கு புரதம் உள்ளிட்ட சத்துணவுகள் அவசியம். அவை இப்பகுதிகளில் உரிய வகையில் வழங்கப்படுவதில்லை. இந்நிலைமையை மாற்றியமைக்கவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது." - என்றார்.
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026