Freelancer / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
தன்னுடைய கள்ள மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலைச் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள், பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
இந்த சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெதிகும்பர எனும் இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தாயான 45 வயதான பெண்ணே இவ்வாறு படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பதுளைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையில் கடந்த 15 வருடங்களாக கூடாத தொடர்பு இருந்துள்ளது.
முதலாவது திருமணத்தில் இருந்து விட்டுப்பிரிந்த அந்த பெண், பொலிஸ் கான்ஸ்டபிளுடன் கூடாத தொடர்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடும் கோபமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, அப்பெண்ணின் தலை நெஞ்சிலும் தாக்கியுள்ளார். வீட்டு வாசலில் மயங்கி விழுந்த அந்த பெண்ணுக்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துவிட்டார் என்று விசாரணைகளின் ஊடாக
கண்டறியப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவல்களின் பிரகாரம், விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். எனினும், அந்த பொலிஸ் கான்ஸ்டபிள், பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். R
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago