2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கவனிக்காமையால் கலங்கியது கிணறு

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட இராகலை பிரதான நகரில் பொது மக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் உள்ள நீர், பாவனைக்கு உதவாத வகையில் கலங்கி அசுத்தமாக காணப்படுகிறது.

இராகலை நகர வாசிகள் மற்றும் நகருக்கு வெளியிடங்களில் இருந்து வருவோர், பயன் படுத்தும் வகையிலும் நகரின் பொது மலசலக்கூடத்துக்கு தண்ணீர் பெற்றுக்கொள்ளும் வகையிலும், குளிப்பதற்கும் இந்த கிணறு வலப்பனை பிரதேச சபையினால்
அமைக்கப்பட்டுள்ளது.

இராகலை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள, கிணற்றை வலப்பனை பிரதேச சபை சுத்தம் செய்து பராமரிக்க தவறி வருவதாக பொது மக்கள் குற்றம்
சுமத்தியுள்ளனர். 

இந்நிலையில் நகர வாசிகள் குளிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கிணற்று நீர் கலங்கி அசுத்தமாக காணப்படுவதால்  சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்தும்,பஸ் பிரயாணத்தை மேற்கொண்டும் சூரியகாந்தி சந்தியில் உள்ள குளிக்கும் இடத்தை தாம்
நாடவேண்டியுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, பல வருடமாக சுத்தம் செய்யாது அதன் பராமரிப்பை இழந்துள்ள இராகலை நகர் பொது குளிக்கும் இடத்தையும், கிணற்றையும் காலம் தாழ்த்தாது சுத்தம் செய்து தர வலப்பனை பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .