2025 மே 16, வெள்ளிக்கிழமை

கவனிப்பாரற்ற நிலையில் மலையகத்தாய்

R.Maheshwary   / 2023 ஜனவரி 03 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கொட்டகலை நகர மத்தியில் வைக்கப்பட்ட மலையக தாய்சிலை தற்போது பறவைகளின் எச்சமிடும் இடமாக மாறிவிட்டதுடன் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து வீணாவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

பல போராட்டங்களுக்கு மத்தியில் நிலையான ஓரிடத்தில் வைக்கப்பட்ட இச்சிலை, இன்று சீரழிந்து காணப்படுகின்றது. இச்சிலை தொடர்பில் கூறிய வாக்குறுதிகளும் வெறும் வாய் வார்த்தைகளாக மாறிவிட்டதாக பலர் குற்றம் சுமத்துவதோடு, இச்சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதாக கூறிய இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானும் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

 2020ஆம் ஆண்டு ஸ்ரீபாத கல்லூரியில் 'முகவரி வர்ணப்பிரவாகம்' எனும் சித்திர கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் இச்சிலை வடிவமைக்கப்பட்டது.

எனினும்  அச்சிலையை ஸ்ரீபாத கல்லூரி வளாகத்தில் வைக்கப்படுவதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து,  ஜீவன் தொண்டமானால் கொட்டகலை பிரஜாசக்திக்கு சொந்தமான கட்டடத்தில் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது.

எனினும் அச்சிலை  இன்று  எவரும் கண்டுகொள்ளாத நிலையில் அநாதையாகி காணப்படுகின்றது கூறப்போனால் பறவைகளின் எச்சமிடும் பகுதியாக மாறியுள்ளதால் பார்ப்பதற்கே அவலநிலையாக உள்ளது.

இது தொடர்பில் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர்  ராஜமணி பிரசாந்திடம் வினவியபோது,  இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இது தொடர்பில் சபை உறுப்பினர்களிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது எனவே, விரைவில் அச்சிலையைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .