Janu / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை , கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு தொழிலாளர்களும் போராட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.
தோட்ட நிர்வாகம் 08 தொழிலாளர்களையும் வேலைக்குச் செல்வதற்கான அனுமதியை கடிதத்தின் ஊடாக அறிவித்ததன் பின்னர் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
கடந்த மூன்றாம் திகதி முதல் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த கவரவில் தோட்டத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகம் தமக்கு வேலை நிறுத்தம் செய்யப்பட்டமை தோட்ட முகாமையாளரின் பழிவாங்கும் செயல் எனவும் எமக்கு பணி இடைநீக்கம் செய்தமைக்கு நீதி வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் பிரதித்தலைவர் திகாம்பரம் ஆகியோர் ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையினை நடத்தினர்.
இந்நிலையில் இதன் பயனாக தோட்ட நிர்வாகம் எட்டு தொழிலாளர்களில் 06 பேரை தொழிலுக்கு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்த போதிலும் எட்டு தொழிலாளர்களையும் தொழிலுக்கு உடனடியாக உள்வாங்க வேண்டும் எனவும் இல்லையெனில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைகள் எச்சரித்தனர்.
சத்தியாக்கிரகம் தொடர்ந்து கடந்த 10ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமாக மாற்றம் பெற்ற நிலையில் தோட்ட நிர்வாகம் எட்டு தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல அனுமதிப்பதாக அறிவித்தல் விடுத்த போதிலும் கடிதம் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை (11) காலை மூவர் மயக்கமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வியாழக்கிழமை (12) காலை தோட்ட நிர்வாகம் எட்டு தொழிலாளர்களுக்கும் வேலைக்கு செல்ல அனுமதிப்பதாக எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ராமசந்திரன்


23 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
50 minute ago
53 minute ago