Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இறம்பொட புலுபீல்ட் தோட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு தொடக்கம், தோட்ட முகாமைத்துவத்துக்கு எதிராக தமது உரிமைகளை கேட்டு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த வேலை நிறுத்த போராட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும்,காங்கிரஸின் தவிசாளருமான மருதுபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட மேல்மட்ட குழுவினர் தோட்ட நிர்வாக முகாமையாளருடன் முன்னெடுத்த போச்சு வார்த்தையில் சுமுகமான இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்தே வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன், 202 தொழிலாளர்களுக்கு சேவைக்கால பணம் ,ஊழியர் சேமலாப நிதி போன்ற பல்வேறு கொடுப்பனவுகள் புலூம்பீல்ட் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்காமல் இருந்தது. இதனால், தோட்டத்தை நிர்வாகிப்பதில் பல்வேறு சிக்கல் நிலைமை தோன்றியிருந்து.
இதன் காரணமாக கடந்த மூன்று வருட காலமாக தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுவந்தனர்.
பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊழியர் சேமலாம நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி ஆகிய கொடுப்பனவுகள் வழங்குவதாக உறுதியளித்த தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அப்பணத்தை வைப்பிலிட்டுள்ளது.
அதே நேரத்தில் அத்தோட்டத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணியும், தொழிலாளர்களுக்கு நஷ்டஈடும் வழங்கவும் இணக்கம் காணப்படடுள்ளது .
எனவே, எதிர்வரும் முதலாம் திகதி இருந்து மீண்டும் பணிக்கு திரும்பவது தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் 3 வருட காலமாக பணிபகிஸ்கரிப்பில் தொழிலாளர்களின் ஈடுப்பட்டு வந்தனர் அப்போராட்டத்தின் வெற்றியாக தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய சகல கொடுப்பணவுகளும் நிர்வாகம் வழங்கியுள்ளது என்றார்.
அத்தோடு குறித்த தோட்டத்தின் முகாமைத்துவத்தின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட முறைப்பாடுகள் சட்ட நடவடிக்கைகள் மற்றும் முகாமைதுவத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீள் பெறுவதற்கான உறுதியும் நிர்வாகம் வழங்கியுள்ளது.
எனவே, நவம்பர் முதலாம் திகதி முதல் தொழிலுக்கு திரும்புமாறு தொழிலாளர்களை ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago