2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காங்கிரஸின் தைப்பொங்கல் இம்முறை இடம்பெறாது

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

தைபொங்கல் நிகழ்வுற்காக செலவழிக்க திட்டமிடப்பட்டுள்ள பணத்தொகையை மலையக மாணவர்களின் கல்வி  வளர்ச்சிக்கும், மலையக மக்களின் நிவாரண திட்டத்துக்கும் பயன்படுத்தபடும் எனவும்  பொதுச்செயலாளர்  தெரிவித்தார்.

அத்துடன் காலங் காலமாக காங்கிரஸ் ஒவ்வொரு தைப்பொங்கல் நிகழ்வினையும்  மலையக பிரதேசங்களில் பொங்கல் விழா எனவும், உழவர் திருநாள் எனவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும். 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை  காரணமாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .