2025 மே 08, வியாழக்கிழமை

காணி உரிமையை பெற்றுக்கொடுக்க பேச்சு

Freelancer   / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை (07) நடைபெற்றது.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண,  நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, காணி அமைச்சின் செயலாளர், காணி மறுசீரமைப்பு குழுவின் தலைவர், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, காணி ஆணையாளர், மற்றும் துறைசார் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் அல்ல பெருந்தோட்டங்களில் உள்ள அனைவருக்கும் காணி உரிமை அவசியம் என இதன்போது அமைச்சர் எடுத்துரைத்தார்.

அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், அது துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X