2025 மே 17, சனிக்கிழமை

காணி உறுதிப்பத்திரம் வழங்கும் கலந்துரையாடல்

Freelancer   / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மஸ்கெலியா நகரை அண்டிய மக்கள் குடியிருப்புகள், கடைத்தொகுதிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மஸ்கெலியா நகரை அண்டிய மக்கள் குடியிருப்புகள், கடைத்தொகுதிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவது நீண்ட காலமாக இழுபறி நிலை இருந்து வந்தது.  இது தொடர்பில்  நுவரெலியா மாவட்ட அரசாங்க செயலாளர்  நந்தன கலபட மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டதாகவும்   ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பாக காணி  அமைச்சர்  ஹரின் பெர்ணான்டோ  கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பான  தகவல்களைத் திரட்டி சமர்ப்பித்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .