Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலகக் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக, காணிப்பகுதியொன்றை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர்களின் நலன்களை விருத்தி செய்யும் வகையில் வாடகை அடிப்படையில் தொழிலாளர் அலுவலக கட்டடத் தொகுதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றுக்கு அன்றாடம் அதிகமான தொழிலாளர்கள் வருகை தருவதோடு, அவர்களுக்கு போதுமான வசதிகளும் அங்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவற்றினை கவனத்திற் கொண்டு நிரந்தரமான தொழிலாளர் அலுவலக கட்டடத் தொகுதியொன்றை அமைப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட தொழிலாளர் அலுவலக கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்காக காணிப்பகுதியொன்று பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
தொழிலாளர், தொழிற்சங்கங்க உறவுகள் மற்றும் சபரகமுவ மாகாண அபிவிருத்தி அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago