R.Maheshwary / 2022 மார்ச் 16 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
காதல் விவகாரத்தால் மாணவனொருவன், இரண்டு மாணவர்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை சிறுவர் பூங்காவுக்கு அருலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மாத்தளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் இருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய, வேறொரு பாடசாலை மாணவன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் கழுத்து, தலை என்பவற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியொருவர் மீதான காதல் விவகாரமே இச்சம்பவத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட மாணவன், மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026