2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 11 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

இந்த மாதம் 8, 9ஆம் திகதிகளில் மொனகலை மாவட்டத்தில் நிலவிய கடும் காற்றினால் வீடுகள் ​சேதமடைந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கவுள்ளதாக  மொனராகலை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எச்.ரவீந்திரகுமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மொனராகலை மாவட்டத்தில்  கடும் காற்றினால் பிபிலையில் 384 வீடுகளும் படல்கும்புர-137, சியம்பலாண்டுவ- 12, வெல்லவாய- 17, மெதகம- 205, புத்தல- 08, மடுல்ல- 1 வீடும் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 இவ்வாறு சேதமடைந்த வீடுகள் தொடர்பில் மதிப்பீடு செய்து, தலா ஒவ்வொரு வீடுகளுக்கும் முதல் கட்டமாக 10,000 ரூபாய் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முழுமையான சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்களும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  மொனராகலை மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றி, போக்குவரத்தை சீராக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .