2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காஸ் லொறியின் திறப்பை எடுத்துச் சென்ற நுகர்வோர்

R.Maheshwary   / 2022 மே 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் பிரதேசத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வந்த லிட்ரோ நிறுவனத்துக்குரிய  லொறியின் திறப்பை, நுகர்வோர் சிலர்  அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்று (21) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.

எனினும் பின்னர் ஹட்டன் பொலிஸார் தலையிட்டு திறப்பை, மீண்டும் சாரதியிடம் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

நேற்று  150 சிலிண்டர்களுடன் ஹட்டன் நகருக்கு லொறியொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இதில் 140 சிலிண்டர்கள் முகவர் நிலையம் ஒன்றில் இறக்கப்பட்டு, மிகுதியாக இருந்த 10 சிலிண்டர்கள் ஹட்டன்- மல்லியப்பு சந்தியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு வழங்க லொறியின் சாரதியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது, குறித்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த சிலர், இந்த விடயம் தொடர்பில் லொறியின் சாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்,லொறியின் திறப்பையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் லொறியின் சாரதியால் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பொலிஸார்  தலையிட்டு லொறியின் திறப்பை சாரதியிடம்  பெற்றுக்கொடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .