R.Maheshwary / 2021 டிசெம்பர் 31 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான, கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்துக்கு கிடைக்கப் பெறும் மரக்கறிகளின் தொகை, பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மொத்த வர்த்தக சங்கம் தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில், கட்டுகஸ்தோட்டை பொருளாதார நிலையத்தின் மொத்த வர்த்தக சங்கத் தலைவர் டீ.என். சில்வா கருத்து தெரிவிக்கும் போது, சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு 10 இலட்சம் கிலோ மரக்கறிகள் கிடைக்கப் பெற்ற போதும், கடந்த தினங்களில் அது ஒரு இலட்சமாக குறைந்திருந்ததாகவும் நேற்று (30) அத்தொகை 75,000 கிலோவாக மேலும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற மரக்கறிகளிலும் விலை கனிசமான அளவு அதிகறித்துள்ளதால் மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .