R.Maheshwary / 2022 மே 02 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை- கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தின் கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (2) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தின் லயக் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வேலு ராஜரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (1) இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில் வீட்டுக்கு பின்னால் இருந்த கிணற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டார்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago