Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 நவம்பர் 16 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
கஞ்சாவுக்கு முன்மொழியப்பட்டுள்ள சட்ட நிவாரணத்தை கித்துல் கள் உற்பத்திக்கும் வழங்குமாறு ஊவா மாகாண கித்துல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல, பசறை, ஊவா பரணகம, லுணுகல, வியலுவ, சொரணாதொட்ட, ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பல பகுதிகளில் கித்துல் உற்பத்தி பாரியளவு முன்னெடுக்கப்படுகின்றது.
ஊவாவில் கித்துல் வளரும் பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள் கித்துல் கள்ளை அருந்தும் பழக்கத்தை பழங்காலத்திலிருந்தே கொண்டிருப்பதுடன் இது ஆரோக்கியமான பானம் என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் படி, கித்துல் கள், மூல நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிறந்தது என்றும் கூறப்படுகின்றது.
ஆனால், கித்துல் கள் தயாரிப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை எனக் கூறி பொலிஸார் தொடர்ந்து கைது செய்வதாக கித்துல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபானத்தின் விலையும் வெகுவாக அதிகரித்துள்ளதுடன், மதுவை விட கித்துல் கள் ஆரோக்கியமானது என்பதால், கித்துல் கள்ளுக்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என கோருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago