2025 மே 17, சனிக்கிழமை

கித்துல்கல பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 15 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என்.ஆராச்சி

சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரோஹன திசாநாயக்க, இன்று தினம் (15)கித்துல்கல பிரதேசத்துக்கு அவசர கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, அமைச்சர்  கித்துல்கல பிரதேசத்தை அண்மித்த களனி கங்கையில் படகு சவாரி விளையாட்டில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பில் முறையான திட்டமிடலை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களின்  உயிர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் ப்ரோட்லன் நீர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து களனி ஆற்றுக்கு திறந்து விடப்படும் நீர், படகு சவாரி விளையாட்டுக்கு போதுமானதாக இல்லையென அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை, கித்துல்கல பிரதேசத்துக்கு வரைவழைப்பது தொடர்பிலும் அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை கித்துல்கல பிரதேசத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .