2025 மே 05, திங்கட்கிழமை

கினிகத்தேனையில் பல வேலைத்திட்டங்கள்

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

அண்மையில் கினிகத்தேனை பிரதேசத்துக்கு வருகை தந்த வனஜீவராசிகள்,  வனபாதுகாப்பு அமைச்சர் ஆர்.எம்.சீ.பீ.ரத்னாயக்க, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

கினிகத்தேனை அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட  பொல்பிட்டிய பாதை அபிவிருத்தித் திட்டத்தை, வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததோடு, வாகனத் தரிப்பிடமொன்றையும் தெரிவு செய்தார்.

கினிகத்தேனை நகரத்தில் அண்மைகாலமாக வாகனங்கள், பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாத காரணத்தால், இந்த இடம் தெரிவு செய்யப்பட்டது.

அத்துடன் கினிகத்தேனை ஆதார வைத்தியசாலை வேண்டுகோளுக்கினங்க வைத்தியசாலைக்கு பதினொரு ஜசியு கட்டில்களை, குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிரிடம் அமைச்சர் ஆர்.எம்.சீ.பீ.ரத்னாயக்க வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X