2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

’கிராம சேவகர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கவும்’

Editorial   / 2020 ஏப்ரல் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஊரடங்குச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரணங்களைப் பகிர்ந்தளிக்கும்போது, அரசியல்வாதிகள் உட்பட பல்வேறுத் தரப்பினரால், கிராம சேவகர்கள் அச்சுறுத்தல், தாக்குதல்களுக்கு உள்ளாவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஸ்ரீ லங்கா கிராம அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார, தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில், கிராமசேவர்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

இதனைக் கருத்திற்கொண்டு, கிராமசேவகர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரி, பிரதமரின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிராம அதிகாரிகள், 5,000 ரூபாய் கொடுப்பனவு உள்ளிட்ட அரசாங்கத்தின் நிவாரணங்களைப் பகிர்ந்தளிக்கும்போது, அவர்கள் மட்டுமன்றி அவர்கள் கொண்டுச் செல்லும் பணத்துக்கும் பாதுகாப்பு இல்லை என்பதால், அவர்களது பாதுகாப்பு மற்றும் அவர்களது சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்யுமாறும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .