2025 மே 05, திங்கட்கிழமை

கிராம, தோட்டப்புற மாணவர்களுக்கு வசதியில்லை

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் பெரும்பாலான பிரதேசங்களில், இணையத்தள வசதிகள் இன்மையால் கணிசமான தொகை மாணவர்கள், ஏனைய மாணவர்களைப் போல் இணையத்தளம் மூலமான கல்வி நடவடிக்கைகளை தொடர முடியமல் உள்ளனர் என, பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக, பாடசாலைகள் நடைபெறாமையால், மாணவர்களுக்கு ஒன்லைன் வசதி வகுப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இணையத்தள வசதிகள் இல்லாத கிராமப்புற, தோட்டப் பகுதி மாணவர்கள் ஏனைய மாணவர்கள் போல் தமது கல்வியைத் தொடர முடியாமல் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி அமைச்சு, கல்வித்திணைக்களங்கள் கூட, மாணவர்களின் நலன் கருதி, இணையத்தள கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளை செய்து வருகின்ற போதிலும், கிராமப்புறங்களுக்கு இணைய வசதிகளை வழங்குவதில் அரசாங்கம், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கரிசனை காட்ட வேண்டு என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X