2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழிக்காத நடத்துனர்களால் விழிபிதுங்கும் பயணிகள்

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டனில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்களில், தங்களின் பயணத்தூரத்துக்கான கட்டணச்சீட்டை நடத்துனர்கள் பெரும்பாலும் வழங்குவதில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ள பயணிகள், இதனால் தாங்கள் பல்வேறான
அசௌகரிங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளன​ர்.

சில பஸ்களில் நினைத்தவாறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. மிகுதி பணமும் தரப்படுவதில்லை. 

கேட்டால் எதுவுமே பேசாது சில நடத்துனர்கள் சென்றுவிடுகின்றனர் என்றும் பயணிகள் தெரிவித்தனர். 

பயணச்சீட்டை வழங்காத சில பஸ்களின் நடத்துனர்கள், தங்களிடமிருந்து இரண்டு முறை கட்டணத்தை வசூலிப்பதற்கும் முயற்சிக்கின்றனர் என்றும், இதனால் பல சந்தர்ப்பங்களில் தேவையில்லாத வகையில் வாய்த்தர்க்கம் ஏற்படுவதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

சில நடத்துனர்கள் பயணிகளை கடுமையாக திட்டித்தீர்க்கின்றனர். 

தங்களுடைய பயணத்துக்கான பயணச்சீட்டை வழங்கினால் இவ்வாறு தேவையில்லாத முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம் என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .