R.Maheshwary / 2021 ஜூலை 19 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில், போதைப் பொருள்களை விநியோகிக்கும்.“குடு சூட்டி” என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரது காரிலுள்ள புத்தர் சிலைக்கு அடியில் மறைத்து வைத்து, ஐஸ் மற்றும் ஹெரோய்ன் ஆகிய போதைப் பொருள்களைக் கொண்டுச் சென்ற போதே, சந்தேகநபர் மாத்தளை- எல்வல பிரதேசத்தில் வைத்து, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை- நாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரைக் கைதுசெய்த போது, அவரது காரிலிருந்து 5.720 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 2.235 மில்லிகிராம் ஹெரோய்ன் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .