2025 மே 08, வியாழக்கிழமை

குடும்ப ஓட்டோ பாய்ந்தது: மூவருக்கும் காயம்

Editorial   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பயணித்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒன்றரை வயது குழந்தை, அதன் தாய், தந்தை (ஓட்டோவின் சாரதி) ஆகியோர் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையில் புதன்கிழமை (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.  

பொவந்தலாவ மோரா தோட்டத்திலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி   நோர்வூட் சென் ஜோன் டில்லரி தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது.

 அந்த குடும்பத்தின் தந்தை செலுத்திய முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  

விபத்தில் முச்சக்கரவண்டி பாரியளவில் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஞ்சித் ராஜபக்க்ஷ , செ.தி.பெருமாள், எஸ்.கணேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X