2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

குட்டியாராச்சி எம்.பியின் வீட்டை உடைத்த ஐவர் கைது

R.Maheshwary   / 2022 மே 18 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா                    

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சியின்  வீடு தாக்கப்பட்டு, சேதம்  விளைவிக்கப்பட்டமை தொடர்பில் ஐவர் பண்டாரவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 9ஆம் திகதி,  நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பண்டாரவளை நகரில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டப் பேரணியின் பின்னர், அங்கு கூடிய கும்பல், மேற்படி பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று  தாக்கி, பலத்த சேதத்தினை ஏற்படுத்தியிருந்தனர்.

இச் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார், இன்று  (18)  ஐவரைக் கைது செய்து, விசாரணைக்குற்படுத்தியுள்ளனர்.

மேலும் சிலர் தேடப்பட்டும் வருவதாகவம் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைகள் நிறைவுற்றப் பின்னர், அவர்கள், பண்டாரவளை  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X