Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 29 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம். ஹேவா
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு அப்பால், குப்பைகளைக் கொட்டிய குற்றச்சாட்டின் கீழ், அந்த நகர சபையின் பணியாளர்கள் இருவர், பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலேந்திரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் மேலும் கருத்துரைத்த அவர்,
ஹட்டன்-டிக்கோயா நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தனியான இடமொன்றில்லை. இதனால் நகர சபையும் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றது.
இந்நிலையில், நகர சபையில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர், வேறு இடங்களில் குப்பைகளை கொட்டிவிடுகின்றனர். இதுவும் பாரிய பிரச்சினையாகும்.
குப்பை மாஃபியா தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளன.குப்பை லொறியை கடைக்கு கொண்டுச் சென்று அந்த கடையின் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படுவதாக, தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்களின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்றபோது, ஊழியர்கள் இருவரும் அவ்வாறே குப்பைகளை பொறுப்பேற்றனர்.
அதன்போது கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டனர்.
அவ்விரு ஊழியர்களும் அந்த கடையில் பணத்தை பெற்றுக்கொண்டே இவ்வாறு செய்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆகையால், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையும் வரையிலும் இவ்விருவரும் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .