2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

குரங்கை விரட்டி பூமாலையை கைப்பற்றவே போராட்டம்

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 28 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் மேல் துளியும் அக்கறை இல்லாத சுயநலவாதிகளிடம் நம் நாட்டை ஒப்படைத்தது குரங்கு கையில் கொடுத்த பூமாலையைப் போன்றது என ​தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ்,  ஆகவே குரங்கை  விரட்டி பூமாலையை கவனமாக கைப்பற்ற வேண்டும் இதற்காகவே  நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.

கண்டியில் ஆரம்பித்து கொழும்பை வந்தடையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு பேரணியில் இன்று(28) கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

மலையக மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தன்னுடைய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கின்ற  கடமை தனக்குள்ளது.

 வஞ்சிக்கும் பெருந்தோட்ட நிர்வாகம், சர்வாதிகார ஆட்சி க்கு மத்தியில் துயரங்களுடன் பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்றார்கள் .

எனவே, இந்த சர்வாதிகார ஆட்சிக்கு பறையடித்து வீட்டுக்கு அனுப்பி, நாட்டு மக்களை அழிவிலிருந்து மீட்கும் வரை எமது போராட்டங்கள் ஓய்வதில்லை  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X