2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குறுக்கு பாதையில் கவிழ்ந்தது மணல் லொறி

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு 

நானுஒயா பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  நானுஒயா குறுக்கு பாதையில் இன்று அதிகாலை  லொறியொன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

மஹியங்கனையில் இருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக  இவ்விபத்து இடம்பெற்று இருக்கலாம் என்று நானுஒயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லொறியினை செலுத்திச் சென்ற சாரதி எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியுள்ளார்.

நானுஒயா குறுக்கு பாதையில் மணல் லொறி போன்ற அதிக பாரம் சுமந்து வரும் வாகனங்களை இப்பாதையில் பயணிக்க தடைவிதிக்கப்பட்டு , அறிவித்தல் காட்சிப்படுத்தப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X