2025 மே 17, சனிக்கிழமை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இராணுவம் பால்மா வழங்கியது

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் பால்மா பெக்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 1398 குடும்பங்களுக்கு பசுமை விவசாய மத்திய நிலையம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பால்மா பெக்கட்டுகளை வழங்கி வைத்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்தி, போசனை மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் அமைக்கப்பட்டுள்ள பசுமை விவசாய மத்திய நிலையம் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இந்த நிகழ்வுக்கு அண்மித்ததாக ஹட்டன் வலயத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 120 குடும்பங்களுக்கும் பால்மா பெக்கட்டுகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .