R.Maheshwary / 2022 மார்ச் 29 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மதுபாதையில் வாகனம் செலுத்தியதாக ஒத்துக்கொண்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரிடம் 1,500 ரூபாய் அபராதத் தொகையை செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் ஜீ.ஜீ.பிரதீப ஜயசிங்க இன்று உத்தரவிட்டதுடன், கடுமையான எச்சரிக்கையின் பின்னர், அவரது சாரதி அனுமதிப்பத்திரமும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 27ஆம் திகதி தனது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் அதிக மதுபோதையில் , ஹட்டன் – குடாகம பகுதியில் உள்ள ஹோட்டலொன்றுக்குச் சென்று, அங்குள்ள பணியாளர்கள் மதுபோதையில் இருக்கின்றார்களா என பரிசோதிக்க வந்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமது பணியாளர்கள் எவரும் மதுபோதையில் இல்லை என்றும் அதனை பரிசோதிக்க வருகைத் தரும் பணிப்பாளர், மதுபோதையில் வரவேண்டாம் என ஹோட்டல் முகாமையாளர் எச்சரித்ததால், அங்கிருந்து வெளியேறிய சுகாதார சேவை பணிப்பாளர், நுவரெலியா நோக்கி தனது வாகனத்தில் பயணித்துள்ளார்.
இதன்போது, அவரது வாகனத்துக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், குறித்த அதிகாரி மதுபோதையில் வாகனம் செலுத்துவதாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்த்தையடுத்து, பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026