Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரிஸ் என்டனி
இரத்தினபுரி மாவட்டத்தில், கூட்டுறவுக் கடைகளில் ஏற்பட்டுள்ள பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக, கூப்பனட்டைகளைக் கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பலர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், உலருணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக, கூப்பனட்டைகள் வழங்கப்பட்டன.
கூப்பனட்டைகளுடன் கூட்டுறவுக் கடைகளுக்கு செல்லும் மக்கள், அங்கு பொருட்கள் இல்லை என்று திரும்பி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, கவலைத் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்பலான கூட்டுறவுக் கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விடயம் குறித்து, இரத்தினபுரி கூட்டுறவுச் சங்கத் தலைவர் நந்த ஜயசிங்கவிடம் வினவியப் போது,
“கூட்டுறவுச் சங்கத்தின் களஞ்சியச்சாலை முற்றுமுழுதாக வெள்ளத்தில் மூழ்கியதால், பொருட்கள் அனைத்தும் சேதமாகின. எனினும், மக்களுக்கு பொருட்களை விநியோகிக்கும் நோக்கில், 78 இலட்சம் ரூபாய் செலவில் உலருணவு பொருட்களை பெற்றுக்கொடுத்தோம். அதற்காக அரசாங்கத்திடமிருந்து இதுவரை 8 இலட்சம் ரூபாய்க்கான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால், கூட்டுறவு கடைகளுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்கத்துக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என்று அவர் மேலும் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .