2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கூப்பனுக்கும் எரிவாயு கிடைக்கவில்லை

R.Maheshwary   / 2022 ஜூன் 01 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.பிரபா

எரிவாயு வரிசையை தவிர்க்கவும் எரிவாயு விநியோகத்தில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கவும் ஹட்டன் - டிக்கோயா நகர சபை எல்லைக்குட்பட்ட நான்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிப்பவர்களுக்கு  கூப்பன் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கை கடந்த இரண்டு நாள்களாக  நடைபெற்றது.

இந்தநிலையில் இன்றுறு (1) ஹட்டனில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

இதன்போது கொட்டும் மழையிலும் தமக்கான எரிவாயுவை பெற்றுக் கொள்ள கூப்பன்களுடன் வருகை தந்தவர்களுள் பலருக்கு எரிவாயு கிடைக்கவில்லை.

எரிவாயு கிடைக்காதவர்கள் தமது கைப்பேசிக்கு அம்பகமுவை செயலகத்தில் இருந்து அழைப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தகமக்கான எரிவாயு கிடைக்கவில்லை என தெரிவித்த அதேவேளை, மேலும்  சிலரோ தாம் பிரதேச செயலகத்தின் அழைப்புகளை தவற விட்டுள்ளதாகவும் அதனால் தமக்கு எரிவாயு இல்லை என்று விநியோக நிலையத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அம்பகமுவ பிரதேச செயலகத்திடம் வினவிய போது, தொலைப்பேசி அழைப்புக்கு பதில் அளிக்காதவர்களுக்கு எரிவாயு உள்ளது என்ற அடிப்படையில் கருதி,  எரிவாயு தேவை பட்டியலில் உள்ளவர்களுக்கான அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

இவ்விடயத்தில் காணப்படும் குறைப்பாடுகளை நிவர்த்திக்க தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X