R.Maheshwary / 2022 மார்ச் 10 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இரத்தோட்டை- மெதவத்த இறப்பர்வத்த பிரிவில் வசிக்கும் தொழிலாளர்கள் குடியிருக்கும் லயக்குடியிருப்பின் தகரங்கள், அத்தோட்ட நிர்வாகத்தில் கழற்றி எடுக்கப்பட்டு சென்றுள்ளதால், அங்கு வசித்த தொழிலாளர் குடும்பங்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
குறித்த லயக்குடியிருப்பில் 7 குடும்பங்கள் வசித்து வருவதுடன், இரண்டு குடும்பங்களுக்கு மாத்திரம் புதிய வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய ஐந்து குடும்பங்களும் இந்த லயக்குடியிருப்பிலேயே வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த தோட்டத்தின் முன்னாள் தோட்ட அதிகாரி அங்கிருந்து இடமாற்றம் செல்லும் போது, குடியிருப்பாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த லயக்குடியிருப்பின் தகரங்களை கழற்றிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரத்தோட்டை பிரதேசசபையின் உறுப்பினர் பிலிப் சேவியர், முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் இந்த பிரதேசத்தில் 50 தனிவீடுகள் அமைக்கப்பட்டதுடன், அது சிலருக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
தனி வீடுகள் வழங்கப்படாதவர்கள், பழைய லயக்குடியிருப்பிலேயே வசித்து வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, குறித்த தோட்ட நிர்வாகத்தால் இந்த முறையற்ற செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026