Janu / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ நீர்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் பொகவந்தலாவ கெசல்கமுவ ஓயா சுத்தப்படுத்தும் பணிபுதன்கிழமை(27) உத்தியோகபூர்வமாகஆரம்பித்துவைக்கப்பட்டது.
14 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரும் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டைமானின் பணிப்புரைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளரும் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி இராமேஸ்வரன் இந்ததிட்டத்தினை திரைநீக்கம் செய்து ஆரம்பித்தார்
இதற்கமைய பொகவந்தலாவ கில்லார்னிபாலம் தொடக்கம் பொகவந்தலாவ டியன்சின் பாலம் வரை கெசல்கமுவ ஓயா சுத்தப்படுத்தும் பணி முதற்கட்டமாக 1.6 கிலோமீற்றர் தூரத்தினை 4 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது,
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி இராமேஸ்வரன் உட்பட மத்தியமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தை வேல் என பலரும் கலந்துகொண்டனர்.
எஸ். சதீஸ்

2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago