Editorial / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயரில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு பெயரிடப்பட்டுள்ளதாகவும் அந்த பெயரை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1996ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் உயிருள்ள ஒருவரின் பெயரை பாடசாலைக்கு பெயரிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூகத்திற்கு தவறான உதாரணத்தை காட்டி குண்டசாலை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலை என பெயரிட்டுள்ளார்.
எனவே, உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை பாடசாலைகளுக்கு வைப்பதற்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோசப் ஸ்டார்லிங் வலியுறுத்தினார்.
11 minute ago
22 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
38 minute ago