2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கேஸ் விநியோகத்தின் போது இரு நகரங்களில் அமைதியின்மை

R.Maheshwary   / 2022 மார்ச் 24 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

பல நாள்களுக்குப் பிறகு, ஹட்டன் பிரதேசத்துக்கு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால், இன்று (24) அதிகாலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதனை நுகர்வோருக்கு விநியோகம் செய்யும் போது, விற்பனை முகவர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதாவது சிலருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு சிலிண்டரை விநியாகித்த முகவர் நிலைய உரிமையாளர்கள், நுகர்வோருக்கு சிலிண்டரை விநியோகிக்கும் பணியை இடைநடுவில் நிறுத்திவிட்டு, ஏனைய சிலிண்டர்களை ஹோட்டல்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து. அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும் இதன்போது ஹட்டன் பொலிஸார் தலையிட்டு, நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த்துடன், பொலிஸாரின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை, கொட்டகலை நகருக்கும் இன்று லிட்ரோ நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், முகவர் நிலையங்கள் சிலிண்டர்களை விநியோகிக்காமல் வர்த்தக நிலையங்களை மூடி வைத்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன்- நுவரெலியா வீதியை மறித்து, கொட்டகலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

எனினும் சம்பவ இடத்துக்குச் சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸார், சமையல் எரிவாயு விற்பனை முகவர்களை அழைத்து வர்த்தக நிலையங்களை திறந்து, நுகர்வோருக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X