R.Maheshwary / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
பல்வேறு போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 35 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் ஹட்டன்- நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் செல்பவர்களை கைதுசெய்யும் சோதனை நடவடிக்கை, ஹட்டன் ரயில் நிலையம், ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் தியகல மற்றும் செனன் ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்த சோதனை நடவடிக்கைக்கு ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் ஸ்டுவட் என்ற மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20- 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன், இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிவனொளிபாதமலை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களில் போதைப் பொருள்களுடன் பயணித்த 200 பேர் கைதுசெய்யப்பட்டு ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026